Vangada Vangada
Nenjile Thunivirunthal
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers Malasiya Vasudevan
Year 1981
Song Lyrics

வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்
வாழ்த்து சொல்லி போங்கடா....
வேணுமின்னா வாங்கித் தாரேன்
பொடவ கட்டுங்கடா டேய்....(வாங்கடா)

அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் இப்ப தேவையில்ல
கண்டாங்கி சேலக் கட்டி
சித்தாட தேடி வந்தாளே.....

நாளும் ஒழைச்சவன் காடு வெதச்சவன்
ஊருக்கு எளச்சவன் ஆனான்டா
ஏழ ஒழப்புல வாழ நெனச்சவன்
ஏறி மிதிச்சிட்டு போறான்டா

கொட்டடா மத்தாளாம்
எழுந்தது பட்டாளாம்
குட்ட குட்ட குனிஞ்சவங்க
நிமிர்ந்து நில்லுங்கடா.....டேய்...(வாங்கடா)

நஞ்சை இருக்குது புஞ்சை இருக்குது
சக்தி கெடைக்கல அண்ணாத்த
நாளை இருக்குது வேளை பொறக்குது
தோள நிமிர்ந்துங்க முன்னால

என்னடா ராமைய்யா இதக்
கொஞ்சம் கேளய்யா
பூனையா கெடந்தவங்க
புலிய போல மாறணும்
பூமியில இருப்பதெல்லாம்
பொதுவுடமை ஆகணும் (வாங்கடா)

ஐயா சாமி வயத்தப் பாரு
தாளம் போடறேன் காசப் போடு
தள்ளிப் போகாதே சாமி....காசக் கொஞ்சம்
தந்துட்டு வூட்டுக்கு போயேன்...

கஞ்சி கொதிக்கல கும்பி கொதிக்குது
நெஞ்சு பொறுக்கல அண்ணாச்சி
கட்ட இடுப்புல கட்ட துணியில்ல
வந்த சுதந்திரம் என்னாச்சு

வாழ்க்கையே போராட்டம்
இதிலென்ன தேரோட்டம்
ஏழைங்களை சிரிக்க வைப்போம்
எழுந்து நில்லுங்கடா.....(வாங்கடா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY