Chithirame Un Vizhikal
Nenjile Thunivirunthal
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Vairamuthu
Singers K.J.Jesudass,B.Vansantha
Year 1981
Song Lyrics

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே ஒரு பூந்தென்றலாய்
தொடவோ...........(சித்திரமே)

இடை கொண்ட அன்னம் ஒன்று
எழிலோடு வந்தாட
நடை சிந்தும் நளினம் கண்டு
மனம் ஒன்று போராட

படை கொண்ட மன்னன் கூட
பசி கொண்டு தள்ளாட
பாவை உந்தன் பருவம் இன்று
பதில் சொல்லுமோ.....(சித்திரமே)

கடல் போல பொங்கும் உள்ளம்
கரை காணும் நேரத்தில்
உடல் மீறி பொங்கும் இன்பம்
அலை மோதும் கோலத்தில்

மடல் கொண்டு இளமை எழுதும்
கவி ஒன்று மலராதோ
விடை சொல்ல விடியும் காலை
வரும் அல்லவோ......(சித்திரமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY