Oorumille Oorukkulle
Nenjile Thunivirunthal
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam
Year 1981
Song Lyrics

ஊருமில்லே ஊருக்குள்ளே
உன்ன விட்டா யாருமில்லே
போறதுக்கும் பாதை இல்ல
போகச் சொன்னே..
அடி உன்னாலே சொந்தம் உண்டாச்சு
அது எல்லாமே இப்ப பொய்யாச்சு...(ஊருமில்லே)

பாறையிலே போட்ட விதை
பட்டா என்ன கெட்டா என்ன
ஆத்துக்குள்ளே தண்ணியில்லே
அக்கரைக்கு ஓடமென்ன

நெஞ்சிலே நெருப்ப வச்சே
நீரிலே கொதிப்ப வச்சே
கண்ணில் வந்த ரத்தத்திலே
செம்பருத்தி செவந்ததடி....(ஊருமில்லே)

ஊர விட்டு வந்த பின்னும்
உன் நெனப்பு மாறலையே
உள்ள உசிர் ஒண்ணே ஒண்ணு
என்ன விட்டு போகலையே

கண்ணில்லா குருடனுக்கு
கையிலே விளக்கெதுக்கு
எந்த வழி எந்தப் பக்கம்
போகுதுன்னு தெரியலையடி...(ஊருக்குள்ளே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY