Neragave Ketkiren Ore
Nenjil Oru Mul
Hero Prathap Bothan
Music Director G.K.Venkatesh
Lyricist M.G.Vallaban
Singers Vani Jayaram,Deepan Chakravarthi
Year 1981
Song Lyrics

நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே என்னிடம் மௌனமோ கண்மணி
நானாகவே பேசவோ பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே...(நேராகவே)

செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது..ஆ...ஆ...ஆ.
நான் காணவும் நாணமோ.......(நேராகவே)

ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன்
அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன்
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்..ஆ...ஆ..ஆ..
ஆனந்தமாய் கேட்கலாம்....

நானாகவே ல....ல...லா பேசவோ ல...ல..லா
பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே
நேராகவே ஆ....ஆ கேட்கிறேன் ஆ...ஆ
ஒரே பதில் நீ இன்று கூறடி....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY