Vanna Kodiyin Madiyil
Porkaalam
Hero M.G.C.Sugumar & Vijayan
Music Director Sankar Ganesh
Lyricist Unknown
Singers S.Janaki
Year 1980
Song Lyrics

வண்ணக் கொடியின் மடியில்
விடியும் வரையில் சொர்க்கம்தான்
ஒரு பேரின்பம் நான் கொடுத்தால் அதில்
பாதி நீ கொடுத்தாய் ஆ...ஆ....ம்ம்ம்ம்..(வண்ணக்)

மன்னன் காணாத மயிலாசனம் உன்னை
தேடும் வாடும் தருணம்
இது உனக்காக உண்டான ராஜாங்கம்தான்
இந்த வரவேற்பும் வழிபாடும் பூர்வாங்கந்தான்.(வண்ணக்)

அர்த்த ஜாமத்தில் ரதி பூஜைதான் அதில்
தீபம் தூபம் சரசம்
இந்த திருமேனி எங்கெங்கும் பூவாசனை
நல்ல அலங்காரம் அபிஷேகம் ஆராதனை (வண்ணக்)

பள்ளிப் பாடத்தில் பல காவியம்
இன்று நான்தான் நீதான் பயில
இன்னும் புரியாத அர்த்தங்கள் ஓராயிரம்
அது புரிந்தாலே ஆனந்தம் நூறாயிரம்...(வண்ணக்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY