En Thozhargale Tamizh
Porkaalam
Hero M.G.C.Sugumar & Vijayan
Music Director Sankar Ganesh
Lyricist Unknown
Singers Krishnakumar,M.C.Balu
Year 1980
Song Lyrics

என் தோழர்களே தமிழ் வீரர்களே
நம் தோள் உயர்ந்தால் பகை ஓடிவிடும்
இந்த பூமியிலே சம நீதியெனும்
கொடி ஏற்றிடுவோம் துயர் மாற்றிடுவோம் (என்)

பண்பாடுவோம் வெற்றி கொண்டாடுவோம்
புது வரலாற்றையே நாம் உருவாக்குவோம்
எல்லோரும் ஓர் குலம் என்றாடுவோம்
மண் மீது தீமையை பந்தாடுவோம்.....(என்)

அன்பெனும் பாதையில் நடப்போம்
ஆணவ போக்கினை தகர்ப்போம்
கண்ணான காந்தியும் பொன்னான நேருவும்
அண்ணாவும் சொன்னது இதைத்தானே
இதை மனதினில் கொண்டே வாழ்வோமே..

பொல்லாத உள்ளம் பூவாக ஆனால்
தீராத பகையும் தீராதோ
அன்பான பாதையில் பண்போடு போகையில்
மண் மீது இன்பங்கள் மலராதோ...(என்)

நல்லோரின் எண்ணங்கள் ஒண்ணாச்சு
அட தீயோரின் வஞ்சங்கள் என்னாச்சு
எல்லாமே கண் முன்னே பார்த்தாச்சு
இன்னும் ஏக்கங்கள் ஏனுங்க அண்ணாச்சி

மண்ணெல்லாம் இனி என்னாகும்
நம் உழைப்பாலே அது பொன்னாகும்
சந்தோஷம் நம் வாழ்வில் உண்டாகுமா
நம் சர்க்காரின் திட்டத்தால் துயர் நீங்குமே (என்)

ஓங்கட்டும் உண்மையின் விளக்கு அதில்
நீங்கட்டும் பொய்மையின் கணக்கு
ஒரு வானம் ஒரு பூமி அதுபோலே
எங்கள் ஜாதி ஒன்றே......

இல்லாமை தீரணும் கல்லாமை மாறணும்
எல்லோரும் செல்வங்கள் பெற வேணும்
எல்லோர்க்கும் வீடுகள் எல்லோர்க்கும் வேலைகள்
எல்லோர்க்கும் சமத்துவம் தர வேணும்...(என்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY