Vellarikka Kattukkulle
Othaiyadi Paathaiyile
Hero Sankar (Ganesh)
Music Director Sankar Ganesh
Lyricist Gangai Amaran
Singers Malasiya Vasudevan
Year 1980
Song Lyrics

வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே குள்ள நரி ஓடுது
குள்ளநரிய பாத்துப்புட்டா யோகம் வந்து சேருது (வெள்ள)

ஆறுந்தான் ஓடுது நானுந்தான் ஓடுறேன்
காலமெல்லாம் என் பயணம் நிக்காது
காட்டு முள்ளும் காலுலதான் தைக்காது
ஒத்தையடி பாதையிது போட்டவன காணல
போட்டவனும் போட்டதுக்கு பேரு வைச்சு போகல (வெள்ளரி)

சூரியனும்தான் சிலநாள் நேரம் தவறும்
எப்போதும் எந்நேரம் தப்பாது ராமைய்யா
காலமும் மானமும் போனா வராது
ஒத்தையடி பாதையிது போட்டவன காணல
போட்டவனும் போட்டதுக்கு பேரு வைச்சு போகல (வெள்ளரி)

ஏரோட்டும் தோளிது ஊரெல்லாம் தாங்குது
பாடுபடும் கூட்டத்துக்கு சுப்பைய்யா
வாட்டமெல்லாம் தீருவது எப்பய்யா
பச்ச நெல்லு அத்த மக போலே இங்கு ஆடுது
நாத்து வச்ச நம்ம விட்டு யாருக்கோ போகுது
ஒத்தையடி பாதையிது போட்டவன காணல
போட்டவனும் போட்டதுக்கு பேரு வைச்சு போகல (வெள்ளரி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY