Enakkenna Vetkama Ennadi
Oru Velladu Vengaiyagiradhu
Hero Sivakumar
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers SP. Balasubramaniam
Year 1980
Song Lyrics

எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே
உனக்கேத்த மாப்பிள்ளை என்னை போலுண்டோ
ஒரு கோடி முத்தங்கள் இந்தாடி இந்தா....(எனக்கென்ன)

ஒரு ஆணும் பெண்ணும் சந்திப்பது எதுக்கடி பொண்ணே
இப்ப நானும் நீயும் சந்திச்சதும் அதுக்கடி கண்ணே
மூணும் ரெண்டும் அஞ்சுங்கிற கணக்கிதுமில்லை
நீயும் முன்னே பின்னே பாடம் சொல்லி கொடுத்ததுமில்லை
அந்த கலைகளை நானும் இன்று படித்திட வேணும் (எனக்கென்ன)

அடி ஓரக் கண்ணில் என்னைக் கண்டு சிரிப்பது என்ன
நீயும் உள்ளுக்குள்ளே ஆசை வைத்து நடிப்பது என்ன
காற்றுக்கென்ன சொந்தம் உன்னை அணைக்குது மெல்ல
நாளை கட்டிக் கொள்ளபோகும் என்னை தடுப்பது என்ன
இன்ப தொடர்கதை ஒன்று நல்ல முகவுரை இன்று (எனக்கென்ன)

சுட்டு சுட்டு பாக்கும்போது பளிச்சிடும் தங்கம் தினம்
தொட்டு தொட்டு பாக்கும்போது படிச்சிடும் அங்கம்
அச்சப்பட்ட நெஞ்சத்துக்கு சுதந்திரம் இல்லை மெதுவா
அங்கே இங்கே தொட்டாலன்றி சுகங்களும் இல்லை இந்த
புடவையைப் போலே என்ன உடுத்திக்க மேலே (எனக்கென்ன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY