Muthu Tharagai Vanaveethi
Oru Kai Osai
Hero K.Bakkiyaraj
Music Director M.S.Viswanathan
Lyricist Muthulingam
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1980
Song Lyrics

முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ.....(முத்து)

பூவிதழ் நூறும் தேன்மது சாறும்
ஓரிடம் சேர்ந்திட தந்தாலென்ன
மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கண்ணா இங்கே

உண்ணத்தான் இது தேனில் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதை சேரும்
தேதியை பாராட்டுவேன்......(முத்து)

பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்க்களமாக ஏன் ஆனதோ...
நீரலை மோதும் தாமரையாக
மேகலை வாயில் கலை ஆகுமே...

கொஞ்சத்தான் இவள் மேனி ஆனதே
மஞ்சம் மேலிது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடி விட
போராடுவாள்........(முத்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY