Machane Vangaiya Andhapuram
Oru Kai Osai
Hero K.Bakkiyaraj
Music Director M.S.Viswanathan
Lyricist Bairavi
Singers L.R.Eswari
Year 1980
Song Lyrics

மச்சானே வாங்கய்யா அந்தப்புரம் நான்
அச்சாரம் போடாத கொய்யாப்பழம்
சின்னய்யா என்னய்யா
நில்லய்யா சொல்லய்யா....

முல்லைக்கு தேர் தந்த ராசா ஆஹா
என்னைக்கும் நான் உங்க ரோசா
பிஞ்சு கத்திரி இஞ்சி பச்சடி
ஆச முந்திரி அழகு சுந்தரி
வந்தேன் பாராய் கண்ணாளா......

ஆளான பொண்ணாட்டம் தாளாத வெட்கத்தில்
கண் மூடி ஏன் நிக்குறே ஆஹாங் ஓஹோங்
ஐயா நாளாக நாளாக நான் கொண்ட ஆசைக்கு
நெய்யூட்டி தீ மூட்டுறே
நான் பட்டு நீ சிட்டு நான் பிஞ்சு நீ கொஞ்சு (மச்சானே)

சேலத்து பூ வாசம் பாரு நான்
சிங்காரி என்னோடு ஆடு
கண்ணு எப்படி காது எப்படி
மூக்கு எப்படி மொத்தம் எப்படி
நல்லாப் பாரு என்னத்தான்

ஆத்தோரம் தோப்புக்கு காத்தாடும் நேரத்தில்
நீ மட்டும் போகாதய்யா ஐயா
பூச்சாண்டி பார்த்தாக்கா ஆத்தாடி ஆபத்து
உன் கூட நான் வாரேன்யா
என் சாமி நான் பூமி உங்கம்மா என் மாமி (மச்சானே)

கல்யாண மாப்பிள்ளை கோலம் ஐயா
கட்டாயம் நீ காண வேணும்
பாக்கு வெத்தல மாத்திக் கொள்ளணும்
காட்டு சந்தனம் பூசிக் கொள்ளணும்
சொன்னா கேளு ஓடாதே.....

பாலோடு தேனோடு பாயோடு பூவெல்லாம்
வாங்கித்தான் நீ வைக்கணும் ஐயா
வித்தாரக் கள்ளிக்கு பாவாடை ஜாக்கட்டு
எல்லாமே நீ தைக்கணும்
நான் பட்டு நீ சிட்டு நான் பிஞ்சு நீ கொஞ்சு (மச்சானே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY