Naan Neerodaiyil Neeradaiyil
Oru Kai Osai
Hero K.Bakkiyaraj
Music Director M.S.Viswanathan
Lyricist Vishwam
Singers S.Janaki
Year 1980
Song Lyrics

நான் நீரோடையில் நீராடையில்
யாரோ வந்து ஏதோ சொல்லி
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்........

உச்சி வெய்யில் நேரத்திலே
மறு நாள் எனையே
தனியா வந்திடச் சொன்னான்
சொன்ன சொல்லை நெனச்சிருந்தேன்
சோறும் எறங்கல கண்ணும் உறங்கல
பொண்ணு மனசில
என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல.....(நான்)

ஊர் உறங்கும் நேரத்தில
பேரச் சொல்லி கிட்ட வந்தான்
வாச மல்லி பூவை அள்ளி
வச்சி விட ஆசப்பட்டான்

வெட்கப்பட்டு தள்ளி நின்னேன்
வேகத்தோடு பக்கம் வந்தான்
கெஞ்சினான் கொஞ்சினான்
வஞ்சி நான் மயங்கிவிட்டேன்
அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது
இன்னும் இனிக்குது.........(நான்)

ஆடி மழை பேஞ்சதிலே
ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான்
ஈரப்பட்ட என் ஒடம்பு
ஏதேதோ கேட்குதுன்னான்

பார்வையிலே ஜாடை சொல்லி
போர்வை ஒண்ணு வேணுமின்னான்
என்னையே போர்வையா
போத்திக் கொள்ள நான் கெடந்தேன்
கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை
தட்ட முடியல........(நான்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY