Sela Illa Ravikka Illa
Oru Kai Osai
Hero K.Bakkiyaraj
Music Director M.S.Viswanathan
Lyricist Chidambaranathan
Singers M.S.Viswanathan
Year 1980
Song Lyrics

சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே
ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள
அது தென்னம் புள்ள அய்யா தென்னம்புள்ள (சேல)

பழத்திலெல்லாம் பெரிய பழம் அத
பாத்து சொக்குறான் பொன்னம்பலம்
புடிச்சு பாத்தான் புடிக்க வல்லே
கடிச்சு பாத்தான் கடிக்க வல்லே

நூறு வயசு கிழவனுக்கும்
ஆசக் காட்டுது அந்தப்பழம்
அது என்ன பழம் தம்பி என்ன பழம்
சம்பளம் சம்பளம் சம்பளம்......சேல...சேல..(சேல)

பாப்பம்பட்டி சந்தையிலே
பாட்டி ஒருத்தி பானை வித்தா
மோரு விக்க முருகன் வந்தான்
பாட்டி கூட போட்டியிட்டான்

போட்டி முடிஞ்சு முருகனுக்கு
ஜோடியாக பாட்டி வந்தா
அது யாரு பாட்டி அது யாரு பாட்டி
அது வப்பாட்டி தம்பி வப்பாட்டி சேல...சேல..(சேல)

தோப்புக்குள்ளே தொண்ணூறு காயி
தொட்டு பறிச்சா துள்ளுதுங்கோ
இனிப்புமில்லே கசப்புமில்லே
எடுத்து திங்க யாருமில்லே

காசு கொஞ்சம் நிறைஞ்சிருந்தா
கால புடிச்சு சுத்துற காயி
அது என்ன காயி தம்பி என்ன காயி
காக்கா காக்கா காக்கா காக்காயி.....(சேல)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY