Aasai Irukku Nenjukkulle
Neerottam
Hero Vijayakanth & Thirumurugan
Music Director A.V.Ramanan
Lyricist Poonguyilan
Singers Uma Ramanan,A.V.Ramanan
Year 1980
Song Lyrics

ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்ல...(ஆசை)

இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே (ஆசை)

மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்
மோகத்தில் வண்டு மலர்களை நாடும்
இரண்டும் ஒன்று இதுதான் என்று
மனம் தினம் நினைத்திடும் வயதல்லவோ...(ஆசை)

ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே
ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்
இதயம் இரண்டு இணைந்தது இன்று
மனம் தினம் நினைத்திடும் இன்பமல்லவோ...(ஆசை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY