Idhayam Or Kavithai
Neerottam
Hero Vijayakanth & Thirumurugan
Music Director A.V.Ramanan
Lyricist Poonguyilan
Singers A.V.Ramanan
Year 1980
Song Lyrics

இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
எதுதான் சொந்தமென
இன்றுவரை தேடுகின்றேன்
என்னுயிரே வாடுகின்றேன்
என் காதல் கண்மணியே......(இதயம்)

தென்றல் தொட்ட பூவிலும்
தேனை தேடி வண்டு வரும்
வண்டு தொட்ட மலர்தனிலே
வாசம் என்றும் குறைவதில்லை
இதைத்தான் நான் நினைத்தேன்
என் காதல் கண்மணியே (இதயம்)

தெய்வம் இன்றி கோயில் இல்லை
தீபமின்றி ஒளியுமில்லை
உன்னையன்றி வாழ்க்கையிலே
உற்ற துணை யாருமில்லை
வாழ்வில் என்றும் உன்னுடனே
வாழ்ந்திடுவேன் கண்மணியே...(இதயம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY