Naan Paavadai Thavani
Kaalam Bathil Sollum
Hero Jai sankar & Sarath Babu
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1980
Song Lyrics

நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு
பங்குனி போச்சு சித்திரையாச்சு
கல்யாண ஆசை வந்து நாளாச்சு.......(நான்)

பாடட்டுமா ஒரு தெம்மாங்கு
ஆடட்டுமா ஒரு தில்லானா
வித்தை இருக்கு என்னோடு
வேண்டியதென்ன நீ கேளு

தெற்கத்தி சீமையில்லெல்லாம்
பேரெடுத்த ஆட்டக்காரி
யாராரோ வந்து கொஞ்சப் பார்த்தாங்க
ஏதேதோ சொல்லி கெஞ்சிக் கேட்டாங்க...(நான்)

அத்தை மகள் என எண்ணாதே
ஆசையில் ஜாடை பண்ணாதே
என்னிடம் வாலை ஆட்டாதே
பல்லை இளிச்சி காட்டாதே

கஸ்தூரி மானைப் போலே
மானமுள்ள சின்னப் பொண்ணு
கூடாது அந்தக் கள்ளச்சிரிப்பு
ஆகாது யாரும் தொட்டால் நெருப்பு...(நான்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY