Gangai Karaiyil Vilaintha
Geetha Oru Shenbagapoo
Hero Jai Ganesh & Srikanth
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers Vani Jayaram,Jolly Abraham
Year 1980
Song Lyrics

கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே....
கோடை மலையில் ஆடும் மயிலே
கொஞ்சினால் கிள்ளை அவளே....(கங்கை)

புள்ளி மானாக துள்ளி வந்தாலும்
பொன்மேக கூந்தல் சதிராடும்
தண்டை தாலாட்ட இடை சீராட்ட
கண் கெண்டை மீனாக விளையாடும்

தத்திடும் மேகலை சப்தம் இடும்படி
முத்து ரதங்களின் ஊர்வலம் வந்தது
சலங் சலங் எனும் இசை
சுகம் சுகம் எனும் மொழியோ....
ஆஹாஹாஹ்.....லாலாலா...ஆஹாஹ்...(கங்கை)

பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும்
பெண் குறிஞ்சி மலராய் உருமாறும்
பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும்
தன் மேனி கலையில் நிறம் மாறும்

கற்பனை மன்னனவன் கண்கள் படும்படி
நிற்பது மென்மையின் அற்புத காவியம்
அகம் புறம் இரண்டிலும்
அவள் சுகம் அவன் உறவே
ஆஹாஹாஹ்.....லாலாலா...ஆஹாஹ்...(கங்கை)

அகநானூறு உந்தன் வரலாறு
உன் அழகு என்றும் பதினாறு
புறநானூறு இது எனுமாறு
நம் கண்ணும் கண்ணும் தகராறு

செங்கனி மேனியில் அம்புலி ஆடிட
மங்கல குங்குமம் மந்திரம் போட
இடம் பொருள் அறிந்தொரு
சுகம் தரும் துணை நீயே
ஆஹாஹாஹ்.....லாலாலா...ஆஹாஹ்...(கங்கை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY