Kudithana Muraimai Padithida
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director Viswanathan Ramamurthy
Lyricist Udumalai Narayanakavi
Singers P.Leela
Year 1955
Song Lyrics

குடித்தன முறைமை படித்திட வேணும்
குடும்பம் நடத்த வேணும் பெண்கள்
குடும்பம் நடத்தவும் வேணும்
கோழி கூவும் அதிகாலை எழுந்து
கூட்டிப் பெருக்க வேணும் பெண்கள்
வீட்டை மெழுக வேணும்....

இடுப்பது வளைந்திட எழில் தரும் விதமாய்
கோலம் போடோணும் நன்றாக
கோலம் போடோணும்
படுக்கையறையும் அடுப்பங்கரையும்
சோற்று பானை சட்டி பாத்திரம் பண்டம்
பத்தும் விலக்கோணும்
விலக்கி சுத்தம் செய்யோணும்..

குருணி நெல்லு உரலிலிட்டு
குத்திப் புடைக்கோணும்
குடம் குடமாய் தண்ணீரை
ஓடோடி எடுக்கணும்

கொப்பரை எல்லாம் குண்டான்
நிறைய ரொப்போணும்
பரிவோடு கன்றையே பாலூட்ட வைக்கோணும்
பசுவை பத்திரமாக கறக்கணும்

பக்குவமாய் சோறு வடிச்சி
பருப்பு சாம்பாரும் வச்சி
மிக்க சுவையான ஒரு கறியோடு
தாலி கட்டினவன் வேர்வை சிந்த
கஷ்டப்பட்டு சேர்த்த பணம் சொத்து தனை
வீண் செலவு புரியாமல் பெண்கள்
சிக்கனமாய் வாழ்க்கை செய்து பழகோணும்..

குடித்தன முறைமை படித்திட வேணும்
குடும்பம் நடத்த வேணும் பெண்கள்
குடும்பம் நடத்தவும் வேணும் இதில்
கூறும் வார்த்தை போல் குணமாய் பெண்கள்
தெரிந்து நடக்க வேணும்
விவரம் புரிந்து நடக்க வேணும்......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY