Manjal Veyil Malaiyile
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director G.Ramanathan
Lyricist Udumalai Narayanakavi
Singers C.S.jayaraman,M.L.Vasanthakumari
Year 1955
Song Lyrics

மஞ்சள் வெய்யில் மாலையிலே
வண்ணப் பூங்காவிலே
பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சும்
பரவசம் பார்........(பஞ்ச)

அஞ்சுகத்தின் பாஷையிலே
ஆணும் பெண்ணும் பேசையிலே
ஆனந்த காட்சி என்றே காணுது பார்.
ஆனந்த காட்சி என்றே காணுது பார்.....

செண்பகத்தின் மேனியிலே தென்றலது மேவி
அங்கு அது பாடும் சல்லாப அழகினைப் பாராய்
ஒன்றுபடும் காதல் சிங்காரம்
ஒற்றுமையை பார் இந்த நேரம்
இன்பரசமாய் சுகபோகம் எங்கும் நமதாகுமே (மஞ்சள்)

நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே
நிஜமாகவே மனதாலே நாம்
நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே
என் மனக்கோயில் தனில் வாழும் மகராணியே
உனக்காக நான் எனக்காக நீ (நினைத்தாலும்)

கனியது உருமாறி வந்ததுபோல் கண்ணே
கண் காணும் காட்சி நீயல்லவோ
துணையாக எனையாளும் ஸ்வாமியன்றோ
சொந்தம் இனிமேல் இருவருமே
இணைப்பிரியா சதிபதி நாம்...

மஞ்சள் வெய்யில் மாலையிலே
வண்ணப் பூங்காவிலே
மாறாத ப்ரேமை கொண்டே மகிழ்ந்திடுவோம்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY