Nagareegama Idhu Nagareegama
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers T.V.Rathinam
Year 1954
Song Lyrics

நாகரீகமா இது நாகரீகமா
போக போக வெறும் போலி அழகையே
புதுமையாக எண்ணும் மதியில்லாத செயல்
நாகரீகமா இது நாகரீகமா...

உள்ள தூய்மையோடு நல்ல பெண்களாய்
ஒழுக்கத்தை வளர்ப்பது நாகரீகமா வெறும்
உடைகளினாலே உடலை மினுக்கியே
ஊரைச் சுற்றுவது நாகரீகமா இது நாகரீகமா

மங்களகரமாய் மஞ்சளைப் பூசி
குங்குமம் அணிவது நாகரீகமா மைதா
மாவைப் போல பேஸ் பௌடரை முகத்தில்
பூசிக் கொள்வது நாகரீகமா இது நாகரீகமா

பாடுபட்டு பணம் தேடும் கணவனுக்கு
பணிவிடை செய்வது நாகரீகமா அவர்
வீடு தேடி வரும் மாலை வேளையில்
உலாவப் போவது நாகரீகமா இது நாகரீகமா

தான் பெற்ற குழந்தையை தாலாட்டி பாலூட்டி
தானே வளர்ப்பது நாகரீகமா அதை
தாயற்ற பிள்ளைப் போல் ஆயாளிடத்திலே
தாரை வார்ப்பது நாகரீகமா இது நாகரீகமா

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அமைந்த தன்மை நாகரீகமா
அறிஞர்கள் பிறந்த நாட்டில் பெண்கள்
அழகை போற்றினால் நாகரீகமா இது நாகரீகமா

கன்னித் தமிழ்நாட்டின் பண்பை எந்நாளும்
கண் போல் காப்பது நாகரீகமா வெறும்
கண்மூடித்தனமாய் மேனாட்டு முறையை
காப்பி அடிப்பது நாகரீகமா இது நாகரீகமா (நாகரீகமா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY