Paraman Arulai Perum
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers Jikki
Year 1954
Song Lyrics

ஓஓஓஓஓஓஹ்ஓஹோஹ்ஹோ..
பரமன் அருளை பெறும் மார்க்கமா இதுதான்
பரமன் அருளை பெறும் மார்க்கமா அவன்
படைத்த பெண்ணை வெறுத்தல் ஞாயமா (பரமன்)

பாரினில் ஆணும் பெண்ணும் நாளும்
இன்பமாய் வாழ வேண்டும் என்னும்
இறைவன் ஆணையை நான் மீறல் ஆகுமா
வீணே முயன்று பெரும்
தோல்வி காணல் ஆகுமா......(பரமன்)

இன்னும் கொஞ்சம் பாருமே என்னை
இனிக்கும் செந்தேன் நானே
நடிக்கும் பொன் மான் வனப்பில் என்னை
எந்தன் பின்னால்.....(இன்னும்)

தங்கச் சிலையாகவே கொஞ்சும் கிளியாகவே
மின்னல் வடிவாகவே விண்ணில் அமுதாகவே
என்னைப் பாரும் எழிலைப் பாரும்
எழுந்து வாரும் மனம் எங்கும் இதை (இன்னும்)

வாழ்வில் பெண்ணின்பமே பாரில் பேரின்பமாம்
அதுவே என்றென்றும் மாறாத ஆனந்தம்
எதிரில் நிற்கும் இதுவே சொர்க்கம்
எழிலார் சிற்பம் மனம் எங்கும் இதை (இன்னும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY