Medhavi Pole Yethedho
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers A.M.Raja,Jikki
Year 1954
Song Lyrics

ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மேலய்யா ஐயா......ஐயா.....

மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக பெண்ணிடம்
தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...(மேதாவி)

காதல் களத்திலே தோல்வி அடைவதே
ஆணுக்கு வெற்றிதானே அது ஆணுக்கு வெற்றிதானே
இது நான் சொல்வதல்ல வான் புகழ் வள்ளுவன்
குறளை படித்து பாரு திருக்குறளை படித்து பாரு

பேச்சினில் பெண்கள் மயங்கிய காலம்
போச்சுது மிஸ்டர் பாருங்க ஓ....ஓஒ......
ஏய்க்க நினைத்தால் இனி முடியாது
நைன்டீன் சிக்ஸ்டி போருங்க இது
நைன்டீன் சிக்ஸ்டி போருங்க..ஆங்...ஹாங்..(மேதாவி)

சுட்டித்தனமாக பேசாதே தாலி
கட்டி விட்டால் வட்டியும் முதலுமாய்
வாங்காமல் விடுவேனோ ஓ....ஓ..ஓஹோ...
திட்டம் நிறைவேறாது பட்டப்பகல் கனவாகுதே
மிஸ்டர் இது பழைய காலமல்ல....

காலம் மாறிய போதும் மனைவி
கணவனுக்கடிமை தானே
கட்டியவன் சொல் தட்டி நடந்தால்
உடைந்து விழும் பல் தானே ஆங்....

அய்யோ நான் என்ன செய்வேன்
அப்போதே தெரியாமல்
மெய்ஞான மோசம் போனேனே
தெய்வமே.....தெய்வமே.....அய்யய்யோ.....

வேடிக்கை பேச்சு வினையாய் போச்சே
தப்பிதம் தாயே ஒப்பாரி வேண்டாம்....
மன்னிப்பு கேட்டுகிறேன் போதுமா
கன்னத்தில் போட்டுகிறேன் பாரம்மா

அய்யே.........ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக பெண்ணிடம்
தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY