Kaviyin Kanavil Vazhum
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers V.N.Sundaram
Year 1954
Song Lyrics

கவியின் கனவில் வாழும் காவியமே
கருத்தில் அழகு செய்யும் ஓவியமே
உயிரோவியமே – இளம் கவியின்
கனவில் வாழும் ஓவியமே.....

சுவையே கனிரசமே தோகையே
உன் நினைவாலே
தவிக்கின்றான் ஒருவன்
ட்ரைவர் இல்லா கார் போலே (இளம்)

காப்பி கசக்குதம்மா மிளகாய்
காரம் இனிக்குதம்மா
பூப்போன்ற இட்லியும் பூரியும்
புளிப்பாய் தோணுதம்மா

சாப்பிட வேண்டுமென்றால் வயிறோ
சண்டை பிடிக்குதம்மா
ஆப்பிளும் ஆரஞ்சும் வியாதியை
அதிகமாக்குதம்மா

தீராத காதலிது தேன்மொழியாளே
வேறு யாராலும் போகாது மான்விழியாளே
மீறி விட்டால் காதல் ஜூரம் மின்னலிடையே
தர்மாமீட்டருக்கும் அடங்காது அன்னப் பேடையே

பாராயோ அன்புடனே பஞ்சவர்ணமே
திரும்பி பாராயோ கண்ணால் பாராயோ
அன்புடனே பாராயோ பாராயோ பாராயோ....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY