Azhage Aanantham Malai
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers Soolamangalam Rajalakshmi
Year 1954
Song Lyrics

அழகே ஆனந்தம் மாலை அழகே ஆனந்தம்
மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம்
வானம் மேலே அழகான ஓடம் போலே
கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம்
இயற்கை அழகே ஆனந்தம் ஆ...அழகே ஆனந்தம்....

அசைந்தாடும் ரோஜா உன்னை
அவர் மீது வீசுவேன்
அன்பாக என்னைக் கண்டு ஏதேதோ பேசுவார்
இசைந்தே உல்லாசமாக இன்பமே கொண்டாடும்
அந்த அழகே ஆனந்தம் ஆ......அழகே ஆனந்தம்....

கண்ணோடு கண்ணும் காதல்
கருத்தோடு உள்ளமே
கலந்தே ஒன்றாகி இன்ப காவிய வெள்ளமே
முன்னோடி பாயும் அன்பில்
மூழ்கியே சந்தோஷம் காணும் (அழகே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY