Singara Paingiliye Pesu
Manohara
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Sundara Vathiyar
Singers A.M.Raja,Radha Jayalakshmi
Year 1954
Song Lyrics

சிங்கார பைங்கிளியே பேசு
செந்தமிழ் தேனை அள்ளி அள்ளி வீசு
சிங்கார பைங்கிளியே பேசு

சங்கம் புகழ் முரசு கொண்ட கவியரசே
என் தமிழ் மொழிக்கே
இதுதான் நீர் தரும் பரிசே

திங்கள் நிறை மலர் முகத்தில்
செவ்விதழ் சேர்த்து நிற்கும்
திருவே தருவேன் மனம்போல்
குறையாதொரு நூறு முத்தம்.....(சிங்கார)

நீரே சொந்தம் ஆனீர் பேச்சிலே எதிரி
நீரே சொந்தம் ஆனீர் பேச்சிலே
அந்த நினைவே மறந்தேன் உன் கண் வீச்சிலே
உந்தன் வீரர் எங்கள் நாட்டுக்கினி அதிபதியே
இயலாள் ஒன்றே போதும் வெகுமதியே..(சிங்கார)

பாண்டிய நாட்டு பூங்குயில் பேடு
ஊஞ்சல் ஆடுதே ஊஞ்சல் ஆடுதே
அது வேண்டிடும் சோழ மண்டல பெண்கள்
ஓடி வீசுதே ஓடோடி வீசுதே

ஆசை குடில்தனிலே
பிணைந்தாடிடும் வேளையிலே
ஆணோடும் பெண்ணும்
கண்ணோடு கண்ணால் ஜாடை பேசுதே
ரெண்டும் ஊடல் பேசுதே.....

பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் துள்ளி ஆடுதே இரு
மீன்கள் துள்ளி ஆடுதே...
விளங்கும் எந்தன் விஜயாளின் கண்
மீன்கள் ரெண்டும் ஆடுதே விழி
மீன்கள் ரெண்டும் ஆடுதே..

அலையோடு அலைத் தாவி
ஒன்று சேர்ந்ததே
ஆம் அதுபோல் நம் இரண்டுள்ளம்
ஒன்று சேர்ந்ததே உள்ளம் ஒன்று சேர்ந்ததே

பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் போலே ஆடுவோம் இரு
மீன்கள் போலே ஆடுவோம்.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY