Ennai Paar Ennazhagai
Manohara
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Sundara Vathiyar
Singers T.V.Rathinam,T.A.Mothi
Year 1954
Song Lyrics

என்னைப் பார் என்னழகைப் பாரு கண்ணாலே
ரெண்டு கண்ணாலே பார்த்தால்
இன்பலோகம் இங்கே தெரியும் தன்னாலே
என்னைப் பார் என்னழகைப் பாரு கண்ணாலே

மண்ணில் புதைந்த மாசில்லாத பொன்மணி
உயர்ந்த பொன்மணி மேனி
வாடா முல்லை ஈடேயில்லா பெண்மணி
என்னைப் பார் இன்பலோகம்
இங்கே தெரியும் தன்னாலே....எப்படி...

ஆசையுள்ள அய்யாமார்கள்
எல்லாருக்கும் சலாம் சலாம்
ஆதரிக்க திறம் இருந்தால்
அருகில் வந்தே பேசலாம் என்
அருகில் வந்தே பேசலாம்....

ஓ....மீசைக்காரரே உல்லாச வேகக்காரரே
விசிறி மடிப்பு வெள்ள வேட்டி வெளிச்சக்காரரே
என்னை ஆதரிக்க திறம் இருந்தால்
அருகில் வந்தே பேசலாம்

ஏ பொடவ ரவிக்கையோடு கொஞ்சம்
பொருளும் கொண்டு வரட்டுமா நீ
போத்திக்க பூட்டிக்க மாட்டிக்க நானும்
பொன்னாபரணம் தரட்டுமா

பொன்னும் பொருளும் ஏதுமில்லா ஏழை
நான் புலவன் படிச்ச புலவன்
எனக்கு புத்தி இருக்குது புகழ் இருக்குது
ஆங்....சொல்லுங்கய்யா..கடன் சொல்லலாமா
கடன் சொல்லலாமா....தாலி கட்டிக் கொள்ளலாமா

ஏ...பொடவ நீங்க பொறுக்கணும்
நீங்க இருக்கணும் ஓய்..புலவரே..ஏம்மா...
இங்கே புத்திசாலி ஆளுக்கெல்லாம் வேலையேயில்லை
நீங்க போயிட்டு வாங்க...வணக்கம்....ஆங்...

ஹூம்....இத்தன பேரு கூட்டத்திலேயே என்
இஷ்டம் போலொரு ஆம்பள சிங்கம் இல்லையா
ஏன் இல்லை நான் இருக்கேன்....நீயுண்டா..நானுமுண்டு...

ஆணி முத்துமாலை கொடுத்தேன் ஆமாம் உன்னாலே
அத நான் பாத்ததேயில்லை
அஞ்சுவர்ண சேல......அத நான் கேட்டதேயில்ல
நீ ஆனதாரய்யா...ஆத்தாடி....நீ குதிர....அடி அம்மாடி
வேணா.....அதுக்கு நானா....

மேகல கைவளை மோதிரம் வங்கி
நாதுர ஜடைபில்ல காது ஜிமிக்கி
மேமெச்ச....? வீடு வைரத்தோடு
ஆடு மாடு காடும் கரையும்
எல்லாம் கொடுப்பேன் ஆளுண்டா.....

நானில்லை....நானில்லை....நானில்லை....
உங்ககிட்ட எல்லாம் ஒண்ணும் இல்ல
நானுமில்ல ஓடுங்க ஒடுங்க....

சங்கீதம் பாடி சந்தோஷமாக ஆடி
சரசாங்கி தானே வந்தாள் தக்க துணை தேடி
சமயமிதே தவறிடிலோ அமையாதென்போல் ஜோடி
சிங்கார ராஜயோக மோகினி ராஜமோகினி
ஜீவ சிந்தாமணி என் போல் இங்கே யாரினி...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY