Inba Nalithe Idhayam
Manohara
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Udumalai Narayanakavi
Singers Jikki,Chorus
Year 1954
Song Lyrics

இன்ப நாளிதே இதயம் பாடுதே
ஈருயிர் ஒன்றாய் அன்பு கலந்தே
இன்பம் தேடும் நாளிதே....திருநாளிதே
இன்னிசை கீதம் பாடுதே....மனம் பாடுதே....(இன்ப)

புதுமண மலரின் மதுவினை உண்டு
பூரண நிலவும் சிரிக்குதே
பொன்னொளி விண்ணை மயக்குதே
பூரித்தே மனம் பாடுதே........(இன்ப)

கனிந்தது நெஞ்சம் முடிந்தது எண்ணம்
கண்டோம் இன்றே அமரலோகமே
கொண்டோம் இன்றே அமுதபாணமே
கனவும் நனவாய் மாறுதே......(இன்ப)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY