Inba Kuyil Kuralinimai
Manithanum Mirugamum
Hero Sivaji Ganesan
Music Director G. Govindarajalu Naidu
Lyricist S.D.Sundaram
Singers A.M.Raja,M.L.Vasanthakumari
Year 1953
Song Lyrics

இன்பக் குயில் குரலினிமை
இதய ஒலி பெண்ணாய்
அன்பு வளர்ச் சோலையிலே
குயில்கள் ஆவோம்.....(இன்பக்)

துன்பம் எனும் வாடைதனில்
துடிக்கிதந்த குயில்தான்
தெம்பிழந்த பறவையென
வாழலாமோ கண்ணே.......

தங்கமென மின்னும் இந்த
தேன்மலரைப் போலே
தேன்மலரைப் போலே
தென்றல் ஒயில் ஊஞ்சலிலே
தூங்கிடலாம் கண்ணா.....

தொட்டவுடன் துவண்டு விடும்
தொல்லையுள்ள பூப்போல்
கஷ்டமுள்ள வாழ்வினில்
காதல் எங்கே கண்ணே.....

விண்முகிலின் நிழலினிலே
விளையாடும் தோகை
விம்மி எழும் ஆசையிலே
ஆடி மகிழ்வோமே.....

அல்லலிலே உலகம் படும்
அவதி இந்த ஆட்டம்
அதைப் போலே ஆடினாலே
அகிலம் சிரிக்காதோ

அமுதமென குளிரும் சுவை
ஊற்றினிலே கண்ணா
அழகு மண ஓடையிலே
மீன்களாவோம் கண்ணா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY