Varungala Thalaivan Neeye
Kangal
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Kambadasan
Singers M.L.Vasanthakumari
Year 1953
Song Lyrics

வருங்கால தலைவன் நீயே பாப்பா
வளர்த்தமிழ் நாட்டிலே பிறந்ததினாலே
வறுமையை போக்கி வாழ்வை உண்டாக்கி
இரு விழியாம் பெண் சரிநிகர் என்று சொல்லும் (வருங்)

கர்வமும் கோபமும் கூடாது பாப்பா
கருணையே உனது பெரும் தனம் பாப்பா
பொய்யும் பொறாமையும் பெரும் பாவமாகும்
மெய் சொல்லும் வாழ்வே வீரம் உண்டாக்கிடும் (வருங்)

அறிவும் தெய்வமும் அன்னையும் தந்து
ஆயிரம் தந்தாலும் விற்காதே சிந்தை
தன்னலமில்லா சேவை தந்திடும் மேன்மை
சொன்னபடி செய்கையில் நடப்பது ஆண்மை..(வருங்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY