Koodu Sellum Paravai
Kangal
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Kambadasan
Singers Jikki
Year 1953
Song Lyrics

கூடு செல்லும் பறவைகளே கொஞ்சம் கேளுங்க
வீட்டுக்கு நான் போகும் முன்னே வேடிக்கையாகவே
ஆட்டங்கள் ஆட வாருங்க ஒன்றாய் சேருங்க
கூடு செல்லும் பறவைகளே... கூடு செல்லும் பறவைகளே

விளையாடும் பருவகாலம் தானே – அதை
வீணாக்க வேண்டாம் சொன்னேனே
வேகம் போகும் வாலிபம்
வேண்டினாலும் திரும்பிடாது

விரைந்து திருப்பும் தேதிபோல்
மிக சிறந்த வாழ்க்கை நாடியே
பறந்து செல்லுவோம் நம்மை
மறந்து இன்பமாகவே
கூடு செல்லும் பறவைகளே....

பறந்து செல்லும் பறவைகளைக் கண்டு சில
பருந்துகளும் வட்டமிடுவதுண்டு அதை
பயப்படாமல் எதிர்த்து நின்று
ஜெயிப்பது நம் தொண்டு

வேடிக்கையையாய் உலக விஷயமெல்லாம்
விளக்கமாக மகிழ்வுடனே பேசி
பம்பரம் போல் ஆடிடுவோம்
இன்ப நடனம் புரிந்திடுவோம்

புதிய உலகம் தேடியே
புதிய கலைகள் நாடியே
மனித நேயம் நிறைந்த நல்ல
மனிதரோடு வாழுவோம்
கூடு செல்லும் பறவைகளே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY