Thayai Kandathillai
Vazhikatti
Hero S.S.Rajendran
Music Director Ibrahim
Lyricist S.S.Rajendran
Singers T.M.Soundarajan
Year 1965
Song Lyrics

வானம்பாடி போல் திரிந்தேன்
வாழ்வேதும் கேட்டேனா
ஏனைய்யா இப்பழியை
என் மேலே போட்டு விட்டார்.....

தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
உற்றார் உறவும் இல்லை ஐயா
உன்னைத் தவிர கதியும் இல்லை நான்..(தாயை)

நாளெல்லாம் நான் உழைத்தேன்
நல்லதைத்தான் செய்து வந்தேன்
தாளாத சுமையை ஐயா......
என் தலையில் ஏன் தூக்கி வைத்தாய் ஐயா (தாயை)

பள்ளியைக் கண்டதில்லை தமிழ்
பாடத்தையும் கற்றதில்லை நான்....
தள்ளி வைத்தாலும் ஐயா....அதை
தாங்கவோ அறிவும் இல்லை......(தாயை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY