Ungal Thevai Ennavendru
Oru Viral
Hero Krishna Rao & Thengai Srinivasan
Music Director S. Vedhachalam
Lyricist Aalangudi Somu
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1965
Song Lyrics

உங்கள் தேவை என்னவென்று தெரியும் - இந்த
பாவை நெஞ்சம் துணை புரியும் – இங்கு
தேவை தேவை கொஞ்சம் பொறுமை – எங்கு
ஓடிப் போகும் இந்த இளமை
ஆஹ்ஹா இளமை ஆஹாஹ் இளமை ஆஹாஹ்...

அந்த பாடல் என்றுதான் தொடங்கும் – இந்த
ஊடல் எங்குதான் அடங்கும் – எங்கும்
மாலை தூவுகின்ற இனிமை – இங்கு
போதும் போதும் இந்த தனிமை
ஆஹ்ஹா தனிமை ஆஹாஹ் தனிமை ஆஹாஹ்..

கூத்தாடும் கனிகள் அழைப்பதுண்டோ – அது
கூடாரம் போட்டு வசிப்பதுண்டோ
பார்க்காமல் அழகு கிடைப்பதுண்டோ – அணில்
பந்தாட வந்தாலே மறுப்பதுண்டோ...(அந்த)

விடியாத இரவை அழைக்கட்டுமா – அங்கு
விருந்தாக என்னை கொடுக்கட்டுமா
மடி மீது ஊஞ்சல் அமைக்கட்டுமா – அங்கு
மாறாத இன்பம் சுவைக்கட்டுமா....(உங்கள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY