Malligai Mottu Sangetuthu
Oru Viral
Hero Krishna Rao & Thengai Srinivasan
Music Director S. Vedhachalam
Lyricist Aalangudi Somu
Singers P.Suseela
Year 1965
Song Lyrics

மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து – வண்டு
மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா
மெல்லிய தென்றல் ஓடி வந்து – எந்தன்
மன்னன் வரக் கூறுதம்மா கூறுதம்மா....(மல்லிகை)

ஓடி வரும் நதிகளுக்கு கடலே மேடை - தினம்
உண்ண வரும் கிளிகளுக்கு கனியே மேடை
ஆடி வரும் ஆசைக்கெல்லாம் மனமே மேடை – எந்தன்
அன்பு மனம் வாழ்வதற்கு அவனே மேடை (மல்லிகை)

காவிரி நதி போலே இடையாடும் - எந்தன்
கால் விரல் நிலத்திலே படம் போடும்
ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும் - அவன்
அழகு முகம் நெருங்கி வந்து சுகம் கேட்கும்...(மல்லிகை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY