Ponvandu Theendatha Malligai
Poovum Pottum
Hero Muthuraman & A.V.M.Rajan
Music Director R.Govarthanam
Lyricist Vali
Singers L.R.Eswari
Year 1968
Song Lyrics

பொன்வண்டு தீண்டாத மல்லிகை
பூந்தென்றல் கொஞ்சாத தாமரை
வெண்மேகம் மூடாத வெண்ணிலா
கண்பட்டு வாடாத பெண் நிலா
நினைத்து நினைத்து மயங்குது தன்னாலே

செவ்வாயின் இதழ்களை திறக்கும்
செந்தேனில் கனிச் சுவை கிடைக்கும்
மலர்ந்தாள் கனிந்தாள் பெண் பாவை...
பொன்வண்டு தீண்டாத மல்லிகை...

முத்து மொழி பேசும் சித்திரம்
மங்கை இளமேனி சந்தனம்
தத்தி நடைப் போட்டு வந்தது
தங்க ரதம் போல நின்றது

இன்பம் ஒரு பாதி என்னிடம்
இன்னும் சரி பாதி உன்னிடம்
சின்ன இடையோடு பின்னவா
சிட்டு விழியோடு கொஞ்சவா....(செவ்வாயின்)

கட்டு குலையாத பொன்னுடல்
தொட்டு பிரியாமல் உன்னுடல்
ஒட்டி உறவாட வந்தது
ஒன்று ஒன்றாக தந்தது

புத்தம் புதிதான பொற்சிலை
நித்தம் உருவாகும் கற்பனை
என்றும் பதினாறு கொண்டவள்
இளமை குறையாமல் நின்றவள்..(செவ்வாயின்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY