Ulagam Olimayame Ullam
Poovum Pottum
Hero Muthuraman & A.V.M.Rajan
Music Director R.Govarthanam
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1968
Song Lyrics

உலகம் ஒளிமயமே உள்ளந்தான் இருள் மயமே
ஒளியும் இருளும் அந்த இறைவன் அருள் மயமே...(உலகம்)

நாளை பொழுது வரும் நல்ல நல்ல சேதி வரும்
பாலவனத்தினிலும் பசுஞ்சோலை தோன்றிவிடும்
காலத்தில் கோடை உண்டு காற்று வரும் வசந்தம் உண்டு
வாழ்வில் இரண்டும் உண்டு வரும் நாளில் அமைதி உண்டு (உலகம்)

அன்றே எழுதியவன் அடுத்ததையும் எழுதிவிட்டான்
ஆயிரம் சொன்னாலும் அழித்தெழுத போவதில்லை
ஏழை அழுத குரல் இறைவனுக்கே கேட்டு விடும்
இரவு விடிந்து விடும் உறவெல்லாம் சேர்ந்து விடும் (உலகம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY