Chella Mama Onnu Sollalama
Naalum Therinthavan
Hero Ravichandran
Music Director S.M.Subbaih Naidu
Lyricist Poovai Sengkuttuvan
Singers T.M.Soundarajan,Chorus,S.V.Ponnusami
Year 1968
Song Lyrics

செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வைத்தவரை
ஊமைப் போல இருப்பதுதான் நம்ம பிள்ளை
செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா...

சிங்கம் போலே இவர் குரல் இருக்கும் மாமா
சிரிக்கையிலே நம்ம உடல் நடுங்கும்
பட்டாளத்து வீரர்தான் நம்ம மாமா
பார்வையிலே லெப்ட் ரைட்டு போடலாமா (செல்ல)

முகத்திலேதான் கண் இருக்கும் மாமா
முதுகுலேயும் அந்த முழி இருக்கும்
உத்து உத்துப் பாக்குற கண்ணு மாமா கண்ணு அதை
ஒப்புக்கொள்ள வேணும் ஒரு துப்பாகின்னு

மனசு திறந்து பேச வந்த மச்சான் உங்க
வாலிபத்த தாடிக்குள்ள மறைச்சிடலாமா
பொறுமை......காந்தி...கடமை.....நேரு...
பண்பு......அண்ணா....
பொறுமை.....கடமை.....பண்பு......
காந்தி.....நேரு.....அண்ணா.....

பொறுமையிலே காந்தியைப் போல்
கடமையிலே நேருவைப் போல்
பண்பினிலே அண்ணாவை போல் இருந்திடவேண்டும்
அந்த பாதையில் நாமெல்லாம் நடந்திட வேண்டும்
தமிழ் பண்போடு நாமெல்லாம் வளர்ந்திட வேண்டும்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY