Vaa Ponnukku Pottu
Kaathal Vaganam
Hero M.G.R.
Music Director K.V.Mahadevan
Lyricist Poovai Sengkuttuvan
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1968
Song Lyrics

வா...பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
நான்...பூவுக்கு ஆடை கட்டவா...(வா...)

பிஞ்சுப் புது அடிகள் அஞ்சி எடுத்து வைத்து
கொஞ்சிச் சிரித்து வரவா
நூலில் அமைத்த இடை ஆடி நடிக்க அதைத்
தேடிப் பிடிக்க வரவா......
என்னென்னவோ…சொல்லிடவோ
சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ..(வா..)

வண்ணப் புது மடியில் வந்து மயங்கி நின்று
வண்டு உறங்கி விழவா
மேளம் முழங்க பலர் ஆசி வழங்க மலர்
ஆரம் சுமந்து வரவா

பாலாகவா……தேனாகவா
பாலாகித் தேனாகி கலந்திடவா
நான்...பூவுக்கு ஆடை கட்டவா
வா...பொண்ணுக்கு பொட்டு வைக்கவா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY