Vanakkam En Vanakkam
Kaathal Vaganam
Hero M.G.R.
Music Director K.V.Mahadevan
Lyricist Mayavanathan
Singers P.Suseela
Year 1968
Song Lyrics

வணக்கம் என் வணக்கம்
சிங்கார வாகனமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே உனக்கும் (வணக்கம்)

அன்ன நடை என்ன நடை கேளடி
யார் யாரோ சொன்ன நடைதானடி
ராகத்தோடு பேச்சிருக்கும்
தாளத்தோடு நடையிருக்கும்
வேகமாக நீ நடந்து பாரடி...(வணக்கம்)

ஆசை எனும் காற்றடிக்கும் பருவம்டி
அலைகளைப் போல விழியிரண்டும் அலையுதடி
ஒளிவு மறைவே இல்லையடி
உலகம் நமக்கே சொந்தமடி
உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி..(வணக்கம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY