Adi Aathi Yarukku nee
Kanavan
Hero M.G.R.
Music Director M.S.Viswanathan
Lyricist Aalangudi Somu
Singers T.M.Soundarajan
Year 1968
Song Lyrics

அடி ஆத்தி........ஆத்தி...........
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி இந்த
ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி....பாரம்மா ராஜாத்தி...(அடி)

அடக்கமின்றி நடப்பதுதான் நாகரீகமோ – பிறரை
அடக்கி ஆள நினைப்பதிலே உனக்கு மோகமோ
சையான் ஷப்பான் டியோ டிம்மா
டிங்கிரி பாப்பா டிங்கிரி ஜிம்மி....
படித்திருந்தும் பண்புகளை மறக்கலாகுமோ – பண
போதையிலே எளியவரை வெறுக்கலாகுமோ..(அடி)

அருமையிலும் அருமையாக பிறவி கிடைக்குது – அதில்
கருணையுள்ள மனிதரைதான் பெருமை அணைக்குது
உருட்டு கண்ணும் மெரட்டு சொல்லும்
தரத்தினை குறைக்கும் ஒன்றை
உருப்படியாய் செய்து வைத்தால் சரித்திரம் பிறக்கும்..(அடி)

அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான் – இங்கே
அன்பு வழி நடந்தவனோ நாட்டினை பிடித்தான்
இது உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே இனி
எத்தர்களின் வருங்காலம் குப்பை மேட்டிலே...(அடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY