Enakkulle Neeyirukka
Jeevanamsam
Hero Jaisankar
Music Director K.V.Mahadevan
Lyricist Vali
Singers P.Suseela
Year 1968
Song Lyrics

எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை....(எனக்குள்ளே)

உன் கண்ணில் படுகின்ற
ஒவ்வொன்றும் என் உருவம்
என் கண்ணில் நிலைத்திருக்கும்
என்றென்றும் உன் உருவம்

தண்ணீரை குடித்தாலும்
தணியாத தாகமன்றோ
என்னுயிரில் உன்னுயிரும்
இணைந்து விட்டால் தீருமன்றோ......(எனக்குள்ளே)

தனியறையின் கதவுகளை
தாழ்ப்போட்டு அடைத்தாலும்
மனமென்னும் தனியறையின்
மணிக்கதவு திறந்திருக்கும்

என் உடலில் நீ பாதி
உன் உடலில் நான் பாதி
இன்ப துன்பம் இருவருக்கும்
இறுதிவரை சரி பாதி..........(எனக்குள்ளே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY