Munthi Munthi Vinayagane
En Thambi
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers L.R.Eswari,Seerkazhi Govindarajan
Year 1968
Song Lyrics

முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார் தன் மகனே
கந்தருக்கு முன் பிறந்த
கணபதியே நீ அருள்வாய்..ஆ...ஆய்....

ஆ...ஆ..தெக்கத்தி கள்ளனடா.....ஆ..ஆ..
தென் மதுரை பாண்டியன் டா
தென்னாட்டு சிங்கமடா சிவாஜி கணேசனடா
தீராதி தீரனடா சூராதி சூரனடா வீராதி வீரனடா....ஆ...ஆ....

நான் பொறந்தது அட நான் பொறந்தது
தஞ்சாவூரு சூரக் கோட்டையிலே
வளப்பு மேல கோட்டையிலே
இருப்பு கீழ கோட்டையிலே....
அலேக் தா அலேக் தா சம்போ சம்போ...
ஜூமுர்தா ஜம்பகா ஏ ஐயா ஏ ஐயா ஏ..

நான் பொழைக்கிற பொழப்பு
இந்த காட்டுப் பக்கத்திலே
கெடைச்சா நாட்டு பக்கத்திலே
அடிச்சா ரோட்டு பக்கத்திலே....

கோட்டை கொத்தளம் மீதில் ஏறி
பூட்டையும் ஒடைப்பேன் ஒடைச்சி
வேட்டையும் அடிப்பேன் அடிச்சி
நாட்டையும் பொளப்பேன்

கூட கோபுர மாட மாளிகை
ஏறியும் குதிப்பேன் பெரிய
கோட்டைய ஒடைப்பேன் எந்த
நாட்டையும் வளைப்பேன்...

வேலூர் ஜெயிலில் மூணு மாசம்
விருந்துக்கு போனேன்
பூட்ட தொறந்துட்டு போனேன்
புடிச்சான் பறந்துட்டு போனேன்

ஆ..ஆ..தக்காளி கண்ணு குட்டி
தாயில்லாத கன்னுக்குட்டி
தஞ்சாவூரு மாமனுக்கு
நீதான்டி பொண்டாட்டி

டீயசாறு தைலம் போட்டு
சினிமா ஸ்டாரு கொண்ட போட்டு
டீ வீ எஸ்ஸு பைக்கு போல
தேடி வந்த சின்னக் குட்டி
டிங்கி டிங்கி ஆடலாம் கொஞ்சம்
டப்பாங்குத்து போடலாம்..ஆங்....நீ யாரு...

நான் ஒரு அரச குமாரன்
இந்த காட்டுல வேட்டையாட வந்திருக்கேன்
சந்தேகமா இருக்கே கொஞ்சம் நடந்து காட்டு
உன் நடைய பாத்தா பொம்பளையா தெரியுது
நீ ஆம்பளையா பொம்பளையா...நான் ஆம்பளைதான்..

ஆம்பிள்ளை என்றாலே ஆறடி கூந்தலை
அள்ளி முடிச்சது ஏனடியோ...ஏனடியோ....
காது குளிருது தாங்க முடியல
மூடி மறைச்சேண்டா கள்ளப் பையா

ஆஹா தங்கத்தை போலே உதடிருக்கு அதில்
மீசை முளைக்காதது ஏனடியோ ஏனடியோ
வீசை கணக்குல மீசை முளைப்பது
வீரமில்லையாடா சின்ன பையா..ஆ...ஆ...

ஆம்பிளைகளை கண்டா விட மாட்டோம்
பொம்பளைகளை கண்டா ஆதரிச்சு அனுப்புவோம்
நான்..பொம்பளை தானுங்க....ஆஹாஹா....

மஞ்ச பூசி பொட்டு வச்ச கன்னிப் பொண்ணே நாம
மாலைப் போட்டு கொண்டால் என்ன சொல்லு கண்ணே
அட வஞ்சம் வச்சு வேலை செய்யும் சின்ன பையா
என்னை வம்பு செய்தால் கொடுப்பேன்
ரெண்டு வளையல் கையில்.....

வாடி குயிலே.......போடா பயலே......
மனதை இரங்கு....நீயோ குரங்கு...
தொடவா மானே....கெடுவாய் வீணே....
நாயகி நீயே..... நடடா பேயே....
ஹாஹாஹாஹ்...ஹாஹாஹ்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY