Thiththikkum Muthtamizhe Kavithai
Devi
Hero R.Muthuraman
Music Director S.Dakshinamurthy
Lyricist Palladam Manickam
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1968
Song Lyrics

தித்திக்கும் முத்தமிழே - கவிதை
சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பொதிகை மலை தந்த செல்வமே...(தித்திக்கும்)

வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த உன்
வயதை அறிந்தவர் இல்லை
மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட
வளத்துக்கும் ஈடிணை இல்லை..(தித்திக்கும்)

சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற
தென்திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

இமயமலை தொட்டு குமரி முனை வரை
இரு கையும் வீசி நடந்தாய்
இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு
யாவரும் போற்றிட வாழ்ந்தாய்...(தித்திக்கும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY