Irul Padhi Oli Padhi
Devi
Hero R.Muthuraman
Music Director S.Dakshinamurthy
Lyricist Palladam Manickam
Singers P.Suseela
Year 1968
Song Lyrics

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான் (இருள்)

பெண் பாதி ஆண் பாதி படைத்தான்
நினைவில் பேர் பாதி அவர்
நெஞ்சில் மறைத்தான்
கண் பாதி வாய் மீதி பேசும் - உயர்
காதலை பெரும் பாதி வளர்த்தான்...(இருள்)

நன்மையுடன் பெரும் பாதி தீமை - வாழ்க்கை
நாடகத்தில் முழு பாதி பொய்மை
இன்பத்தை சிறு பாதி வைத்து – ஏனோ
துன்பத்தை பெரும் பாதி தந்தான்.....(இருள்)

முதல் பாதி வாழ்வுக்கு இளமை – பின்
முடிகின்ற பாதிக்கு முதுமை
இதில் பாதி நாளுக்கு தூக்கம் பின்
இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..(இருள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY