Devi Sridevi Thedi Alaikindren
Devi
Hero R.Muthuraman
Music Director S.Dakshinamurthy
Lyricist Palladam Manickam
Singers P.B.Sreenivas
Year 1968
Song Lyrics

தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் – அன்பு
தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்....

ஆலய வாசலில் காணேன்
கோபுர அழகின் நிழலிலும் காணேன்
பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும்
பொய்கை கரையிலும் உனைக் காணேன் (தேவி)

சங்கம் வழங்கிய தமிழில் உன்
மங்கல கீதத்தை கேட்டேன்
மனமெனும் மேடையில் நாளும் உன்
மாணிக்க சிலம்பொலி கேட்டேன்...(தேவி)

கூவி அழைத்தும் வரவில்லை என்
குறையினை தீர்க்கவும் மனமில்லை
பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன் என்
பாடலை கேட்டும் ஏன் வரவில்லை...(தேவி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY