Chinna Kuzhanthai Vizhikalile
Devi
Hero R.Muthuraman
Music Director S.Dakshinamurthy
Lyricist Palladam Manickam
Singers T.M.Soundarajan
Year 1968
Song Lyrics

சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா (சின்ன)

குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை
வளர்ந்த மனிதன் ஆசைகளால்
வாழும் வழிகளில் நேர்மையில்லை..(சின்ன)

கனியிதழ் சிரிப்பில் அழகாட
கன்னப் பொய்கையில் தேனூற
கவிதையைப் போல் வரும் குழந்தையின் பிஞ்சு
காலடி நிழலே சொர்க்கமம்மா

கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை
இன்னொரு பிறவி நானெடுத்தால்
என்றும் குழந்தையாய் வாழ விடு
இறைவா....என்றும் குழந்தையாய் வாழ விடு (சின்ன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY