Arimugama Naan Puthumugama
Deiveega Uravu
Hero Jaisankar
Music Director K.V.Mahadevan
Lyricist Mayavanathan
Singers L.R.Eswari
Year 1968
Song Lyrics

அறிமுகமா நான் புதுமுகமா
துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட
உன்னை அழைக்கணுமா
அழைப்பிதழை அனுப்பனுமா..(அறிமுகமா)

செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்கார பெண்மை கொண்டு
சொல்லாத சேதி சொன்னதோ – உள்ளம்
சொர்க்கத்தை தேடுகின்றதோ..

பாலாடை வண்ணம் தொட்டு
மேலாடை மின்னும் மொட்டு
தாளாத மோகம் கொண்டதோ –அந்த
தாகத்தில் வேகம் வந்ததோ...(அறிமுகமா)

கண்ணோரம் தோட்டமிட்டு
கனி ஊஞ்சல் ஆட விட்டு
உண்ணாத கோலம் என்னவோ – இந்த
உலகத்தில் லாபமென்னவோ

பொல்லாத ஆசை வந்து
தள்ளாடும் அல்லிச் செண்டு
உன் மார்பில் சாய வேண்டுமோ – இன்பம்
உயிரெல்லாம் பாய வேண்டுமோ..(அறிமுகமா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY