Poonai Kannai Moodinal
Bommalattam
Hero Jaisankar
Music Director V.Kumar
Lyricist Avinasi Mani
Singers Tharapuram Sundarajan,Sarala
Year 1968
Song Lyrics

பூனை கண்ணை மூடினால்
உலகம் இருளுமா
புருஷன் என்று சொல்லிக் கொள்ள
போர்டு போட வேணுமா போர்டு வேணுமா...

காதலுக்கே கண்ணில்லே
காத்திருக்க முடியல்லே
கழுத்த நீட்ட தடையில்லே
காலம் இப்போ சரியில்லே...(பூனை)

இருட்டுக்குள்ளே இருப்பவனுக்கு
உருவம் தெரியுமா
இரண்டு கண்ணும் குருடுதானே
இன்னும் தயக்கமா

கண்ணிழந்த அவனுக்கென்ன
காது இல்லையா – நம்
காதல் ஆசை பாட்டு எல்லாம்
கேட்குமில்லையா கேட்குமில்லையா (பூனை)

காதல் செய்ய வந்து இங்கு
கதைய மாத்துறே – உன்னை
கடற்கரைக்கு கொண்டு போயி
சிலையாய் வைக்கிறேன்

கன்னி எந்தன் காதல்
மனம் புரியவில்லையே
நான் காலமெல்லாம் குமரிதானே
பாட்டியில்லையே பாட்டியில்லையே (பூனை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY