Aarumuga Samy Vandhu
Andru Kanda Mugam
Hero Ravichandran
Music Director K.V.Mahadevan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1968
Song Lyrics

ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே
சொல்லடி பெண்ணே சொல்லடி பெண்ணே
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே.....

ஆசைக் கொண்ட நெஞ்சுக்குள்ளே
பாதை ஒன்று வந்த பின்னே
வாழ்வுக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே....

நல்ல கார்க்காலம் வந்தது வீட்டிலே – குயில்
காதோரம் பேசுது பாட்டிலே
வடிவேலாடும் ஏழையின் நெஞ்சிலே
மயில் தானாட வந்தது கண்ணிலே

வேலை நம்பி வந்த பின்னே
யாரை நம்ப வேண்டும்
எதிர்காலம் சுகமாகும் சொல்லடி கண்ணே
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே...

எங்கும் பூவை அள்ளி தூவுது மார்கழி
தைப்பொங்கல் வரப்போகுது பாரடி
உந்தன் தேவையென்ன என்பதை கூறடி
உன்னைத் தேடி வரும் கந்தனை கேளடி

ஏறு மயில் ஏறும் மன்னன்
இல்லை என்பதில்லை
எதிர்காலம் சுகமாகும் சொல்லடி கண்ணே
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY