Yamma Yamma Summa
Thalattu
Hero Rajapandian
Music Director M.L.Srikanth
Lyricist Tirupathur Rasu
Singers L.R.Eswari
Year 1969
Song Lyrics

யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்....(யம்மா)

தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு......
தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு......

தானானே பாட்டு இனி தேனாகட்டும் அவங்க
தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும்
தானாக திரிஞ்சவரு சீராகட்டும் – பெத்த
தாய் தந்தைக்கும் நல்ல பேராகட்டும்....(யம்மா)

சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க அந்த
வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க
மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க
அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க..(யம்மா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY