Vilakkillamal Kanakkezhuthi
Thalattu
Hero Rajapandian
Music Director M.L.Srikanth
Lyricist Tirupathur Rasu
Singers T.M.Soundarajan
Year 1969
Song Lyrics

ஊரெல்லாம் வெறுத்தாலும்
உன் மனதில் பாசமுண்டு
உண்மையெல்லாம் மறைந்தாலும்
உன் நிழலில் நீதியுண்டு
உன் நிழலே மறைந்து விட்டால்
யார் நிழலில் நானிருப்பேன்
யார் நிழலில் நானிருப்பேன்.......

விளக்கில்லாமல் கணக்கெழுதி – என்
வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா – வேறு
வழியில்லாமல் மனிதன் வடிவில்
என்னைப் படைத்தாயா கண்ணா
என்னைப் படைத்தாயா.....(விளக்கில்லாமல்)

தூக்கு மேடை ஏறிய பின்னே
சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா
நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே
பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா (விளக்கி)

மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்
சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா
பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும்
வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY