Ninakka Vaithai Pesa
Thanga Malar
Hero Gemini Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1969
Song Lyrics

நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா ஒன்றை
நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா......(நினைக்க)

மறந்தவரை நினைக்க வைத்தாய்
தேவ தேவா
நெஞ்சில் நிறைந்தவரை பிரித்து வைத்தாய்
தேவ தேவா.....(நினைக்க)

அவர் முகத்தை நினைக்க வைத்தாய்
அவர் அடுத்தவரை மணக்க சொன்னார்
எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா இதில்
என்னையுமேன் ஆட வைத்தாய் தேவதேவா (நினைக்க)

காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய்
வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய்
மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய்
இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய்...

வாழ்வதற்கு படைத்திருந்தால் வாழ விடு தேவா
மறைவதற்கென்றமைத்திருந்தால் அழைத்து விடு தேவா
தங்க மலர் மணம் வீச செய்து விடு தேவா
நீ சமைத்து வரும் சோதனையை முடித்து விடு தேவா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY